அமேதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவிற்கு சிக்கல் உருவாகி உள்ளது. அங்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராகுலின் குடியுரிமை மற்றும் கல்வித்தகுதியில் எழுப்பிய ஆட்சேபம் இன்று விசாரிக்கப்பட உள்ளது.
உபியின் அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். இந்தமுறை அவர் இரண்டாவது தொகுதியாக கேரளாவின் வயநாட்டிலும் மனுச்செய்துள்ளார்.
இந்நிலையில், அமேதியில் ராகுலின் மனு மீது அங்கு சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் சில ஆட்சேபங்கள் எழுப்பியுள்ளார். அதில் அவர், பிரிட்டனின் ஒரு நிறுவன இணையதளத்தில் ராகுல் தம் நாட்டை சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், அந்நிறுவனம் குறிப்பிடும் ராகுலின் கல்வித்தகுதி வேறுபடுகிறது. இதனால், ராகுலின் வேட்புமனு மீது விசாரணை நடத்திய பின் அதை ஏற்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதை ஏற்று அமேதியின் தேர்தல் அதிகாரி, ராகுலின் மனு மீது நேற்று முன்தினம் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்காக அவர் முன் ஆஜரான ராகுலின் வழக்கறிஞர் இன்று (திங்கள் கிழமை) வரை கேட்ட கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதை கையில் எடுத்த பாஜக செய்திதொடர்பாளரான ஜி.வி.எல்.நரசிம்மா ராவ் ராகுலின் வேட்புமனுவை விமர்சித்து கூறும்போது, ‘இதில் வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது. ராகுல் மீதான கடும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் உடனடியாகப் பதில் அளிப்பது அவசியம். அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றிருந்தார் என்பதன் உண்மையை ராகுல் விளக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனையில் நரசிம்மா ராவ் விளக்கத்தின்படி, ராகுல் 2004-ல் ஒரு பிரிட்டன் நிறுவனத்தின் பங்குகளை பெற்றுள்ளார். அப்போது அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றதாகவும், எம்பில் பயின்றது பொருளாதாரத்திலா அல்லது வளர்ச்சித்துறையிலா என்பதிலும் ஆட்சேபம் கிளம்பியுள்ளது.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி வேட்பாளரின் வேட்புமனு மீது கிளம்பும் ஆட்சேபனை மீது பாதிக்கபப்ட்டவரை அழைத்து அதன் அதிகாரி விசாரிக்க வேண்டும். ஆனால், அதன் உண்மைத்தன்மையை ஆணையம் நேரடியாக விசாரிக்காமல், ஆதாரங்கள் மட்டும் கேட்க முடியும்.
இந்த ஆதாரங்கள் பொய் என தெரிந்தால் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்திற்கு அணுகுவது தான் முறையாகும். எனினும், வேட்பாளர் மனு மீது தேர்தல் அதிகாரி ஆட்சேபம் எழுப்ப முடியாது எனவும் இருப்பதால், ராகுலின் அமேதி போட்டியில் சிக்கல் இருக்காது எனக் கருதப்படுகிறது
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago