பிடிஐ தலைவராக மகேந்திர மோகன் குப்தா தேர்வு

By பிடிஐ

“பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா” (பிடிஐ) செய்தி நிறுவனத்தின் தலைவராக மகேந்திர மோகன் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பிரபல ஹிந்தி நாளிதழ் ஜாக்ரனின் மேலாண்மை ஆசிரியர் ஆவார்.

பிடிஐ துணைத் தலைவராக பாப்பே சமாச்சார் மேலாண்மை இயக்குநர் ஹோர்முஸ்ஜி என்.காமா தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லியில் நேற்று பிடிஐ-யின் 66-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இருவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய மொழி நாளிதழ் சங்கம், இந்திய நாளிதழ் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராகவும் மகேந்திர மோகன் குப்தா இருந்துள்ளார்.

இந்திய நாளிதழ் கூட்டமைப்பின் தலைவராக காமா இருமுறை பணியாற்றியுள்ளார். தற்போது இந்திய வாசகர்கள் ஆய்வு கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார். ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன், இந்திய வர்த்தக ஒழுங்கு கவுன்சில் ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார்.

என்.ரவி (தி இந்து), வினீத் ஜெயின் (டைம்ஸ் ஆப் இந்தியா), விஜய் குமார் சோப்ரா (ஹிண்ட் சமச்சார்), அவீக் குமார் சர்க்கார் (ஆனந்த பஜார் பத்திரிகா), எம்.வி. வீரேந்திர குமார் (மாத்ருபூமி), ஆர்.லட்சுமிபதி (தினமலர்), ரியாத் மேத்யூஸ் (மலையாள மனோரமா) சஞ்சய நாராயண் (ஹிந்துஸ்தான் டைம்ஸ்), விவேக் கோயங்கா (இண் டியன் எக்ஸ்பிரஸ்) ஆகியோர் பிடிஐ இயக்குநர் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகை துறை சாராத இயக்குநர்களாக பேராசிரியர் இ.வி.சிட்னிஸ், நீதிபதி எஸ்.பி. பரூச்சா, நரிமன் ஆகியோர் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்