பவன் கல்யாண்தான் அடுத்த முதல்வர்: ஆந்திராவில் மாயாவதி பேட்டி

By என்.மகேஷ் குமார்

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜனசேனா, பகுஜன் சமாஜ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் பகுஜன் சாமாஜ் தலைவர் மாயாவதி நேற்று விசாகப்பட்டினத்தில் பவன் கல்யாணுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாயாவதி கூறியதாவது:

ஆந்திர மக்கள் இம்முறை மாற்றத்தை விரும்புகின்றனர். இதனால் இங்கு ஜனசேனா கட்சி அமோக வெற்றி பெறும். தேர்தலுக்குப் பிறகு பவன் கல்யாண் முதல்வராக பதவியேற்பார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை காங்கிரஸ் பல ஆண்டுகள் ஆட்சி புரிந்தும் எவ்வித வளர்ச்சிப் பணியும் செய்யவில்லை. இதனால்தான் தெலங்கானா போராட்டம் தலைதூக்கியது. சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரின் மாயையில் இருந்து ஆந்திர மக்கள் விடுபட வேண்டும். பவன் கல்யாண் போன்ற இளைய தலைவர்களை வரவேற்க வேண்டும். அப்போதுதான் நல்லாட்சி அமையும். இவ்வாறு மாயாவதி கூறினார்.

அமராவதியில் நேற்று பவன் கல்யாண் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், 60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு மாத உதவித்தொகை, விவசாயத்திற்கு ரூ. 8 ஆயிரம் முதலீட்டுத் தொகை, ஆரம்பக் கல்வி முதல் முதுகலை படிப்பு வரை இலவசம் என்பது உட்பட 96 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்