உத்தரபிரதேசத்தில் தனது முக்கிய எதிரியாக இருந்த சமாஜ்வாதி (எஸ்பி) கட்சியுடன் கைகோத்து மெகா கூட்டணி அமைத்த மாயாவதி, அதை மபியிலும் தொடர்ந்துள்ளார்.
தம் கூட்டணியில் ம.பி.யின் கோண்டுவானா கன்தந்திரக் கட்சியையும் (ஜிஜிபி) சேர்த்துள்ளார். இங்கு கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை பறித்திருந்தது.
முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு 2 எம்எல்ஏக்களைக் கொண்ட பிஎஸ்பியும், ஒரு எம்எல்ஏவைக் கொண்ட எஸ்பியும் தானாக முன்வந்து ஆதரவளித்து உதவின. எனினும், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி சேர மறுத்தது போலவே மக்களவைத் தேர்தலிலும் மாயாவதி காங்கிரஸுடன் சேராமல் பிஎஸ்பி தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளார். ம.பி.யில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில், பிஎஸ்பி 26 இடங்களில் போட்டியிடுகிறது. எஸ்பி 2 மற்றும் ஜிஜிபிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜகவிற்கு எதிரான வாக்குகள் பிரியும் வாய்ப்பு ஏற்பட்டு ஆளும் காங்கிரஸுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.
ம.பி.யின் சட்டப்பேரவைத் தேர்தலில் வெளியான முடிவுகள் காங்கிரஸின் வெற்றிக்கானது அல்ல எனக் கருதப்படுகிறது. ஏனெனில், அங்கு தொடர்ந்து மூன்று முறை நீடித்த பாஜக ஆட்சியின் முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் இருந்தார். இவரது ஆட்சிக்கு எதிரான மனநிலை ம.பி. வாக்காளர்களிடம் நிலவியது. பாஜகவுக்கான மாற்று கட்சி இல்லாத காரணத்தால் வாக்காளர்கள் காங்கிரஸுக்கு வாக்களித்திருந்தனர்.
இதனால்தான், 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114, பாஜக 109-லும் வெற்றி பெற்றன. மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் நோட்டாவை விடக் குறைந்த வாக்குகளை பெற்றிருந்தது. தனித்து போட்டியிட்ட பிஎஸ்பி மற்றும் எஸ்பியும் சுமார் 30 தொகுதிகளில் காங்கிரஸின் சில ஆயிரம் வாக்குகளைப் பிரித்திருந்தன. இந்நிலையில், மக்களவை தேர்தலிலும் பாஜகவிற்கு எதிரான வாக்குகள் பிரியும் வாய்ப்பு உள்ளது. மாயாவதி அமைத்த கூட்டணியால் காங்கிரஸுக்கு ஏற்படும் இழப்பு, பாஜகவுக்கு லாபமாக அமையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் எண்ணிக்கை 2014 -ல் கிடைத்ததை விடக் குறைவாகவே இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago