சுத்தமான இந்தியா பிரச்சாரம்: மத்திய அரசு அலுவலகங்கள் முன்கூட்டியே மூடப்படுகின்றன

By பிடிஐ

அக்டோபர் 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ‘சுத்தமான இந்தியா’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை அறிமுகம் செய்வதையடுத்து நாளை அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் மதியம் 2 மணிக்கு மூடப்படுகிறது.

"நான் சுத்தம் குறித்து அதிக கடமை உணர்வுடன் இருப்பேன், இதற்காக நேரம் ஒதுக்குவேன், நானும் குப்பை கொட்ட மாட்டேன், அடுத்தவர்களையும் கொட்டவிட மாட்டேன்" - இதுதான் வியாழக்கிழமை மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் மகாவாக்கியம்.

அக்டோபர் 2ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் சுத்தமான இந்தியா என்ற பிரச்சாரத்திற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார். நாட்டு மக்களுக்கும் இது பற்றி அறிவுறுத்தவுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அப்போது சுத்தமான இந்தியா என்ற குறிக்கோள் நிறைவடையும் என்று நரேந்திர மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

1 min ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்