கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.
இதனையொட்டி, விஐபி பக்தர்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் சில கட்டுப்பாடுகளை நேற்று தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு அறிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கோடை விடுமுறையையொட்டி, சாமானிய பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இதனால், ஜூன் மாதம் 15-ம் தேதி வரை, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமியை தரிசிக்க நேரடியாக திருமலைக்கு வரும் விஐபிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, எம்.பி., எம்.எல்.ஏக்கள், மற்றும் அறங்காவலர் குழுவினர்களின் சிபாரிசு கடிதங்கள் தேர்தல் முடிவுகள் வரும் வரை ஏற்கப்பட மாட்டாது. இவ்வாறு அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு கூறினார்.
வராக சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்திருமலையில் உள்ள பிரசித்தி பெற்ற வராக சுவாமி திருக்கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று காலை 11.07 மணி முதல் மதியம் 1.16 மணி வரை கோயில் விமான கோபுர தங்க கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேக விழா நடந்தது.
கடந்த 1982ம் ஆண்டிற்கு பின்னர் சுமார் 37 ஆண்டுகளுக்கு பின் தற்போது வராக சுவாமி மகா கும்பாபிஷேகம் நடந்துள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago