சந்திரபாபு நாயுடு மார்பிங் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட ராம்கோபால் வர்மா: ஆந்திரா போலீஸார் வழக்குப் பதிவு

By ஏஎன்ஐ

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒய்எஸ்ஆர் கட்சியில் இணைவதுபோல சித்தரிக்கும் மார்பிங் செய்யப்பட்ட படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதாக இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது புகார் அளித்துள்ள தெலுங்குதேசக் கட்சியை சேர்ந்த நிர்வாகி, தேவிபாபு சவுத்திரி இதுகுறித்து தெரிவிக்துள்ளதாவது:

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடப்பள்ளி கூடெம் காவல்நிலையத்தில் இப்புகாரை நான் அளித்துள்ளேன். ஏற்கெனவே ஏற்கெனவே அவர்மீதான ஒரு புகாரை நான் தெலங்கானாவில் அளித்துள்ளேன். தற்போது புகார் அளிக்க காரணம் சந்திரபாபு நாயுடு ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருந்தால் என்று பதிவிட்டு முதல்வரின் படத்தை அவர் மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். எங்கள் மனதை இது புண்படுத்துகிறது.

ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை குலைப்பதாகவே ராம் கோபால் வர்மாவின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன. இதனால் அவர் மீதான ஒரு புகாரை நான் காவல்நிலையத்தில் அளித்துள்ளேன். இதனை போலீஸார் ஏற்றுக்கொண்டனர். இப்பிரச்சினை குறித்து விசாரணை செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் அவர்மீது ஒரு எப்ஐஆர் வழக்கும் பதிவு செய்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவிடம் வெளிப்படையாக அவர் மன்னிப்பு கேட்கும்வரையில் எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு தேவிபாபு சவுத்ரி தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ''முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவின் படத்தை மார்பிங் செய்து கண்ணியக்குறைவான வாசகங்களுடன் சமூக வலைதளத்தில் ராம்கோபால் வர்மா வெளியிட்டதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் குடும்பத்தினரைப் பற்றிகூட தேவையற்ற கருத்துக்களை அப்படத்தோடு சேர்த்து வெளியிட்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் போட்டோ மார்பிங் தொடர்பாக ராம்கோபால் வர்மாவிடம் விசாரணை நடத்தப்படும்'' என்றார்.

வர்மா இன்னொரு பேஸ்புக் பதிவில் முதல்வரின் மகன் ராரா லோகேஷ், மருமகள் பிராமணி அவரது தந்தை பாலகிருஷ்ணா ஆகியோர் பற்றியும் நையாண்டி செய்து கருத்துக்கள் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்