யாசின் மாலிக் உடல் நிலை மோசமாகியுள்ளது.. அவர் உயிர் மீதான பயம் எங்களுக்கு அதிரித்து வருகிறது: குடும்பத்தினர் கவலையுடன் குற்றச்சாட்டு

By பியர்சாதா ஆஹிக்

தடைசெய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக்  ‘பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டி’ தந்த குற்றச்சாட்டில் 13 நாட்கள் என்.ஐ.ஏ.விசாரணையில் திஹார் சிறையில் அடைக்கப்படுமாறு  உத்தரவிடப்பட்டார். இந்நிலையில் காவலில் அவர் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தார் கவலையுடன் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

யாசின் மாலிக் வயது 53. யாசின் மாலிக் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக குடும்பத்தினர் தகவலை வெளியிட லால் சவுக்கின் மைசுமா பகுதி முழுதும் கடையடைப்பில் சென்றது.

 

“கடந்த 10 நாட்களாக யாசின் மாலிக்கைச் சந்திக்க அனுமதியில்லை. இன்று வழக்கறிஞர் யாசின் மாலிக் உடல்நிலை படுமோசமாக உள்ளதாகத் தெரிவித்தார். ஏப்ரல் 16 முதல் அவர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  தேசிய விசாரணை முகமை தன்னை சட்ட விரோதமாக கைது செய்துள்ளதாக அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது உயிர் பற்றிய பயம் எங்களுக்குள் ஏற்பட்டுள்ளது” என்று யாசின் மாலிக் சகோதரி ஸ்ரீநகரில் தெரிவித்தார்.

 

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி செய்தித் தொடர்பாளர் முகமது ரஃபீக் தார் உடல் நிலை மோசமடைந்துள்ளது அவர் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றார்.

 

“இந்தச் சூழ்நிலை காரணமாக இஸ்லாமாபாத்தில் அடக்குமுறை இந்திய அணுகுமுறையை எதிர்த்து இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டமும் லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக 5 நாள் தர்ணா போராட்டமும் நடத்த முடிவெடுத்துள்ளோம்.  மனிதாபிமானமற்ற முறையில் யாசின் மாலிக் கையாளப்படுவதை கடுமையாக கண்டிக்கிறோம்.. ஏதாவது நடந்தால் நிச்சயம் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்” என்கிறார் முகமது ரஃபீக் தார்.

 

முன்னதாக, மார்ச் 7ம் தேதியன்று பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யாசின் மாலிக் கோட் பல்வால் சிறையிலிருந்து திஹார் சிறைக்கு மாற்றப்பட்டார். பிப்ரவரி 26ம் தேதி மாலிக் வீட்டில் என்.ஐ.ஏ. கடும் சோதனை நடத்தினார்கள்.

 

இந்நிலையில் யாசின் மாலிக் டெல்லி பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் நாளை மறுநாள் (22ம் தேதி) ஆஜர் படுத்தப்படுகிறார். கடந்த மார்ச் 22ம் தேதி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்