பிரதமர் மோடி வரவால் வாரணாசியை சுத்தப்படுத்த 1.4 லட்சம் லிட்டர் நீர்?

By ஆர்.ஷபிமுன்னா

பிரதமர் நரேந்திர மோடியின் வரவால் வாரணாசியை சுத்தப்படுத்த 1.4 லட்சம் லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அந்நகரவாசிகளில் சுமார் 30 சதவீதம் பேருக்கு குழாய்களில் தண்ணீர் கிடைக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி.யின் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி. இதற்காக வாரணாசியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதற்காக, ஒருநாள் முன்பாக வந்திருந்து நேற்று வாரணாசியின் முக்கியச் சாலைகளில் பிரச்சாரம் செய்தார். லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இந்தப் பிரச்சாரத்தின் போது சாலைகள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது.

சாலைகள் மற்றும் அதன் ஓரமுள்ள சாலைத்தடுப்புகள் ஆகியவை நீரால் சுத்தப்படுத்தப்பட்டன. வாரணாசி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பில் சுமார் 40 வாட்டர் டேங்குகளும், 400 பணியாளர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் வாரணாசி நகர நிர்வாக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ''சர்வதேச சுற்றுலாத் தலமாகவும், தெய்வீக நகரமாகவும் அமைந்துள்ள வாரணாசியில் முக்கியப் பண்டிகை நாட்களில் இதுபோல், சாலைகளை நீரால் சுத்தப்படுத்துவோம்.

இந்நகரின் 70 சதவீதத்தினர் குழாய் நீரையும், மீதியுள்ளோர் கைப்பம்புகளையும் பயன்படுத்துகின்றனர். நகரின் சுத்தப்படுத்துதலின் போது சுமார் 30 சதவீத குழாய்களில் நீர் வரத்து திருப்பி விடப்படும்'' எனத் தெரிவித்தனர்.

பிரதமர் மோடியின் இந்தப் பிரச்சார ஊர்வலத்தில், ‘மோடி! மோடி!’ எனக் குரல் கொடுத்து வாரணாசிவாசிகள் பலத்த வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பிரதமர் மோடியின் உருவப்படங்களும், அவரது கட்சியான பாஜகவின் தாமரை சின்னமும் வைக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்