மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்சூலாவிலிருந்து காதிமா வரையிலும் உள்ள இந்திய- நேபாள எல்லைப் பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியா-நேபாள ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று சம்பாவாட்டில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயரதிகாரிகள் கூறுகையில், ''இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தார்சூலாவிலிருந்து காதிமா வரை உள்ள நேபாளப் பகுதிகள் மூடப்பட உள்ளன. ஏப்ரல் 9-ம் தேதி நள்ளிரவில் இருந்து ஏப்ரல் 11 அன்று 8 மணி வரை 68 மணி நேரம் எல்லை முற்றிலுமாக சீல் வைக்கப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்விரு நாடுகளைத் தவிர மூன்றாவது நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் நோயாளிகளுக்கும் இது பொருந்தாது'' என்றனர்.
இந்தியாவும் நேபாளமும் நேரும் இடங்களான தர்சூலாவிலிருந்து காதிமா வரை 300 கிலோ மீட்டருக்கு தங்களது எல்லைப்பகுதிகளை வரையறுத்துள்ளன.
உத்தரகாண்டில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 11 அன்று நடைபெற உள்ளது.
ஒரே டம்ளரில் 5 சுவை: ‘லேயர் டீ’யில் அசத்தும் மாணிக்கம்
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago