வாரணாசியில் தமிழக மடங்கள், பாரதியார் இல்லம் செல்லவில்லை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். மீது உத்தரபிரதேச தமிழர்கள் அதிருப்தி

By ஆர்.ஷபிமுன்னா

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மாலை சென்னையில் இருந்து விமானத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாரணாசி வந்து சேர்ந்தார். மறுநாள் தனது மறைந்த மூதாதை யருக்காக பிண்ட தானம் எனும் சடங்கு செய்தார்.

வாரணாசியின் அனுமன்காட் பகுதியின் ஒரு வீட்டில் அவருக்கு தமிழகத்தின் புரோகிதரான கணேச கனபாடிகள் அதை செய்து வைத்தார். இந்த சடங்கை அங்கு ஓடும் புனித கங்கையின் கரைகளில் அமர்ந்து செய்வது வழக்கம். ஆனால், முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமன்காட் பகுதியில் உள்ள வீடுகளில் சடங்கை செய்து விட்டு கங்கை கரையில் முடித்துக் கொள்கிறார்கள். இதற்கு கரைகளில் செய்யப்படும் பூஜைகளின் போது பொதுமக்களின் தொல்லை ஏற்படுவது காரணம் ஆகும்.

ஏப்ரல் 26 மூன்றாம் நாளில் பிரதமர் மோடியின் வேட்புமனு தாக்கல் ஊர்வலத்தில் ஓ.பி.எஸ். கலந்துகொண்டார். அதேதினம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக அவைத் தலைவர் டாக்டர் பி.வேணு கோபாலுடன் டெல்லியில் இருந்து வாரணாசி வந்திருந்தார்.

ஏப்ரல் 27 காலை வாரணாசியில் இருந்து விமானத்தில் கிளம்பியவர் சென்னை வழியாக ராமேஸ்வரம் சென்றார். இதுபோல் இறந்தவர் களுக்காக வாரணாசியில் சடங்கு செய்பவர்கள் இடையில் எந்தப் பணியும் செய்யாமல், ராமேஸ்வரம் சென்று அதை முடிக்க வேண்டியது ஐதீகம் என உள்ளது.

இதனிடையே, வாரணாசியில் உள்ள தமிழ் மடங்களுக்கும், பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்கும் ஓ.பி.எஸ்.செல்லவில்லை. தமிழர்கள் அதிகம் வாழும் அனு மன்காட்டில் பாரதியார் வீடும், அருகிலுள்ள கேதார்காட்டில் 400 வருடப் பெருமைவாய்ந்த குமாரசாமி மடமும், கதோலியா பகுதியில் 200 வருடங்கள் பழமை யான ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரமும் அமைந் துள்ளன.

இந்த மூன்று இடங்களுக்கும் வாரணாசி வரும் தமிழர்களில் பெரும்பாலானவர் வருகை புரிவது வழக்கம். ஆனால், துணை முதல்வர் ஓ.பி.எஸ். அந்த மூன்று இடங் களுக்கும் வருகை தராதது உ.பி. தமிழர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அனுமன்காட் பகுதி தமிழர்கள் கூறும்போது, ‘‘மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் துணை முதல்வரான மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஆகியோர் சமீபத் தில் வாரணாசி வந்தபோது பாரதியார் இல்லம் உட்பட மூன்று இடங்களுக்கும் வந்திருந்தனர். ஓ.பி.எஸ். வந்திருந்தால் இந்த மூன்று தமிழ் இடங்களும் வட மாநிலத்தவர் இடையே பெருமைப் படுத்தப்பட்டு இருக்கும். ஆனால் துணை முதல்வரே வராமல் சென் றது எங்களை அதிருப்திக்கு உள் ளாகி விட்டது’’ எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்