வைரலான ராகுல் காந்தி வீடியோ: பியூஷ் கோயல் கிண்டல் - குஷ்பு பதிலடி

By ஸ்கிரீனன்

வைரலான ராகுல் காந்தி வீடியோ தொடர்பான பியூஷ் கோயல் கிண்டலுக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதி தவிர்த்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்துக்காக 2 நாட்கள் பயனமாக வயநாட்டுக்கு ராகுல் காந்தி வந்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற ராகுல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இன்று சமூகவலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. அதில் ராகுல் காந்தியின் பேச்சை பி.ஜெ.குரியன் மொழிபெயர்க்க தெரியாமல், தடுமாறுவது போல அந்த வீடியோ அமைந்திருந்தது. மேலும், இடைஇடையே ராகுல் காந்தி தான் என்ன சொன்னேன் என்பதை மைக்கை விட்டு அவருடைய காதில் மறுபடியும் சொன்னார். பிறகு அதனை மொழிபெயர்த்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்து எதிர்க்கட்சியினர் பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். இந்த வீடியோவை மத்திய பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டரில் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தியின் ஆதாரமில்லாத குற்றச்சாட்டைப் புரிந்து கொள்ள மட்டுமல்ல, மொழிமாற்றம் செய்வதும் கடினம். இந்த பொன்னான வீடியோவைப் பார்த்து அதைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த கிண்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், “நீங்கள் உட்பட அனைத்து பாஜக தலைவர்களும், எப்படி எல்லாவற்றையும் ஒரு புன்னகையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நீங்களாக இருந்திருந்தால் கண்டிப்பாக அந்த நபரின் கனவையும், லட்சியத்தையும் ஒட்டு மொத்தமக நசுக்கியிருப்பீர்கள். உங்கள் மேல் பயம் படர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்