வாக்குப்பதிவு இயந்திரம் சேதமடைந்துள்ளதால் வயநாட்டின் மூப்பநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட 79-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பாஜக கூட்டணி வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 3-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. குஜராத், கேரளா, பிஹார் என 14 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில், கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கூட்டணி கட்சியான பாரத் தர்ம ஜன சேனா கட்சியின் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், வயநாட்டில் உள்ள மூப்பநாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிஎம் எஸ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 79-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதாக புகார் கூறியிருக்கும் ஜன சேனா வேட்பாளர் வெள்ளப்பள்ளி அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "நான் மிக முக்கியமான பிரச்சினையின் மீது உங்கள் கவனத்தைக் கோருகிறேன். வயநாட்டில் உள்ள மூப்பநாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிஎம் எஸ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 79-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்படுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது. இரண்டு முறை பொத்தானை அழுத்தியும்கூட வாக்கு பதிவாகவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரண்டு முறை பொத்தானை அழுத்துவதால் வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்படும் என்பதால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்" எனக் கோருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், கேரள மாநிலம் கோவளம் அருகே அமைக்கப்பட்டிருந்த 151-வது வாக்குச்சாவடியில், காங்கிரஸ் சின்னத்துக்கு வாக்களித்தால், பாஜகவின் சின்னத்தில் விளக்கு எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, அங்கும் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago