டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவராக இருந்தவர் கன்னையா குமார். அங்கு கலந்துகொண்ட மாணவர் போராட்டத்தில் கன்னையா மீது தேசவிரோத வழக்குகள் பதிவாகி கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் இருக்கும் அவர் நாடு முழுவதிலும் பிரபலமாகி விட்டார். இதனால், மக்களவை தேர்தலில் போட்டியிட கன்னையாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) வாய்ப்பளித்துள்ளது. பல்வேறு முக்கியப் பிரபலங்கள் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும் அவருக்காக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
மத்திய பெங்களூரூ தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று முதல் பேகுசராயில் தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். சிபிஐயின் தேசிய செயலாளர் டி.ராஜா, சமூக ஆர்வலரும் பாலிவுட் நடிகையுமான ஷபானா ஆஸ்மி, தனது கணவரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தருடன் கன்னையாவுக்கு பிரச்சாரம் செய்ய இன்று பேகுசராய் வருகின்றனர். இவர்கள் அனைவரும் பிரச்சாரத்தின் கடைசிநாளான ஏப்ரல் 24 வரை அங்கு தங்கி வாக்கு வேட்டையில் ஈடுபடவுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரான சீதாராம் யெச்சூரி மட்டும் இன்று ஒருநாள் மட்டும், கன்னையாவுக்காக பிரச்சாரம் செய்கிறார்.
கன்னையாவை பாஜக சார்பில் அதன் மத்திய அமைச்சரான கிரிராஜ்சிங் கிஷோர் எதிர்த்து போட்டியிடுகிறார். இருவருமே பூமியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மெகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தன்வீர் ஹசன் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவளிக்கும் அங்குள்ள முஸ்லிம்களால் வாக்குகள் பிரியும் சூழல் நிலவுகிறது. மெகா கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்தாலும் அக்கட்சியின் இளம் தலைவர்களான குஜராத்தை சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் பட்டேல் ஆகியோர் பேகுசராய்க்கு வந்து கன்னையாவுக்காகப் பிரச்சாரம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago