மோடியின் அமெரிக்க பயணத்தை அரசியலாக்க தேவையில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து

By பிடிஐ

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை அரசியலாக்க தேவையில்லை. இந்தியாவின் நலன்களை காக்கும் வகையில் அவரது அமெரிக்க பயணம் அமையும் என நம்புகிறேன் என் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

மோடியின் அமெரிக்க பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது. அவர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அங்குள்ள நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர் பாக நேற்று போபாலில் செய்தியா ளர்களிடம் பேசிய திக்விஜய் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து அவர் கூறியது: இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பேச மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இந்தியாவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் அங்கு முழுமையாக செயல்படுவார் என்று நம்புகிறேன். எனவே இதனை அரசியலாக்க தேவையில்லை என்றார்.

மகாராஷ்டிரத்தில் பாஜக சிவசேனை, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உடைந்தது குறித்த கேள்விக்கு, அரசியல் கொள்கைகளைவிட தங்களின் தனிப்பட்ட நலன்கள்தான் முக்கியம் என நினைத்து செயல்படத் தொடங்கி யுள்ளதுதான் இதற்கு காரணம். இது நாட்டுக்கு நல்லதல்ல. காங்கிரஸின் கொள்கைகளில் நம்பிக்கையில்லாதவர்கள் அதில் இருந்து விலக எந்த தடையும் இல்லை என்றார்.

இப்போதைய மத்திய அரசு முதலீட்டாளர்களின் கூட்டத்தை மகாஉற்சவம் போல பிரமாண்ட மாக நடத்துகிறது. இதனால் நாட்டு நல்லது ஏற்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆனால் பாஜக தலைவர்களும், அரசு அதிகாரிகளும் பயனடை கின்றனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்