பிஹாரின் மூத்த அரசியல் தலைவராக இருப்பவர் சரத் யாதவ் (71). ஏழுமுறை மக்களவையிலும், மூன்று முறை மாநிலங்களவையிலும் உறுப்பினர் பதவி வகித்தவர்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்தவர். இவர், தொடர்ந்து மதேபுரா தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். கடந்த மூன்று தேர்தல்களில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியால் தோற்கடிக்கப்பட்டார்.
இதில் லாலுவிடம் இரண்டு முறையும்(1998, 2004), பப்பு யாதவ் எனும் ராஜேஷ் ரஞ்சன் யாதவிடம் ஒருமுறையும் (2014) தோல்வி அடைந்திருந்தார்.
கடந்த வருடம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ் மீண்டும் இணைந்ததை எதிர்த்து அக்கட்சியில் இருந்து வெளியேறினார் சரத் யாதவ். தற்போது லோக் தந்திரிக் ஜனதா தளம் எனும் பெயரில் புதிய கட்சி உருவாக்கி லாலுவின் தலைமையில் அமைந்த மெகா கூட்டணியில் சேர்ந்தார்.
இதனால், சரத் யாதவிற்கு தனது கட்சி சார்பில் மதேபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார் லாலு. இதன்மூலம், 3 முறை தன்னைத் தோற்கடித்த லாலுவின் கட்சி சார்பிலேயே வேட்பாளராக போட்டியிடும் நிலைக்கு சரத் யாதவ் தள்ளப்பட்டுள்ளார். எனினும், அங்கு நிலவும் மும்முனைப் போட்டியால் சரத்தின் வெற்றி, மதேபுராவில் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது.
மதேபுராவின் எம்பி.யான பப்பு யாதவ், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். லாலு கட்சியில் இருந்து வெளியேறியவர் சுயேச்சை வேட்பாளராகி வீடு தவறாமல் வாக்கு கேட்டு வருகிறார். இதே தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் சார்பில் மாநில அமைச்சர் தினேஷ் சந்திர யாதவை நிறுத்தப்பட்டுள்ளார்.
எனவே, இந்த மூன்று யாதவ் வேட்பாளர்களால் மதேபுராவில் மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. யாதவ் சமூகத்தினர் அங்கு சுமார் 40 சதவீதமும், முஸ்லிம்கள் 30 சதவிகிதமும் உள்ளனர். ஏற்கெனவே நடந்ததுபோல இங்கு மீண்டும் சரத் யாதவ் தோல்வியுற்றால் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினராகவும் இந்தமுறை வாய்ப்பு இல்லை. ம.பி. மாநிலம் ஹோஷங்காபாத்தில் இருந்து பிஹார் அரசியலில் குதித்தவர் சரத் யாதவ்.
எனவே, அவர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் எனவும் சரத் கட்சியின் தலைவர் தனது மாமா என்றும் பிரச்சாரம் செய்கிறார் பப்பு. இவர், மதேபுராவை சேர்ந்தவர் என்பதால் அனைத்து சமூகத்தினரின் ஆதரவும் பப்புவிற்கு கிடைத்து வருகிறது. அதேசமயம், பப்பு, சரத் ஆகிய இருவரது வாக்குகள் பிரிவதால் நிதிஷ் கட்சியின் வேட்பாளருக்கு லாபம் கிடைக்கும் நிலை உள்ளது. மதேபுராவில் மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago