சோனியா கண்ணீர் வடித்து நான் பார்த்ததில்லை: அமித்ஷாவுக்கு சல்மான் குர்ஷித் பதிலடி

By ஏஎன்ஐ

பட்லா ஹவுஸில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் இறந்த தீவிரவாதிகளுக்காக சோனியா கண்ணீர் வடித்தார் என்று பேசிய பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாஜக முன்னதாக, "2008-ல் பட்லா ஹவுஸில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது சில போலீஸாரும் இறந்தனர். ஆனால் அந்த போலீஸாரைப் பற்றிக் கவலைப்படாமல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்காக கண்ணீர் வடித்தவர் சோனியா" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், அதற்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், "சோனியா கண்ணீர் சிந்துவதை ஒருவேளை அமித்ஷா பார்த்தாரோ என்னவோ? ஆனால், சோனியா கண்ணீர் வடித்து நான் பார்க்கவில்லை. பாட்லா ஹவுஸ் துப்பாக்கிச் சண்டை குறித்து சோனியா தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார் என்றே கூறினேன். இதுபோன்ற தீவிரவாத தாக்குதலின்போது கருத்து சொல்வது இயல்பே. ஒருவேளை இதைத்தான் அமித்ஷா கண்ணீர் என்றே கூறுவாரேயானால் அமித் ஷாவும் விரைவில் அழுவார்" எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்