ராகுல் பாஜகவை எதிர்க்கவில்லை, இடதுசாரிகளைத்தான் எதிர்க்கிறார்: பினராயி விஜயன் பேட்டி

By ஏஎன்ஐ

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடுவது பாஜகவுக்கு எந்த விதத்திலும் போட்டியாக இருக்காது, இடதுசாரிகளுக்குத்தான் சவாலாக இருக்கும் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் அமேதி தொகுதியில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, 2-வது தொகுதியாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் இந்த முறை போட்டியிடுகிறார் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வாக அறிவித்தது.

கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்காக காங்கிரஸ், இடதுசாரிகள்,  பாஜக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பினராயி விஜயன் பதில் கூறியதாவது:

கேரளாவின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் பெரிய வித்தியாசம் ஏதும் ஏற்படப்போவதில்லை.

ராகுல் பாஜகவை எதிர்ப்பவராக இருந்தால், பாஜக போட்டியிடும் தொகுதியில் போட்டியிட்டிருக்க வேண்டும், ஆனால், இடதுசாரிகளுக்கு எதிராகப் போட்டியிடுகிறார். இடதுசாரிகளுக்கு எதிராக ராகுல் போட்டியிடும் போது நாங்களும் கடும் சாவலாக இருப்போம்.

கேரளாவைப் பொறுத்தவரை இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் கட்சிகக்கும்தான் போட்டி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இதில் பாஜக எந்தவிதத்திலும் போட்டிக்குள் வராது.

நாங்கள் ஏற்கனவே வயநாட்டில் இடதுசாரிக்கான வேட்பாளரை அறிவித்துவிட்டோம். அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.பி.சுனீர் போட்டியிடுகிறார். தேவைப்பட்டால் அவர் ராகுல்காந்தியுடன்  பேசுவார் " இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்