தெலங்கானாவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 2 மாணவிகளுக்கு 8 அதிகாரிகள்

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 2 மாணவிகள் மட்டுமே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். ஆனால், இவர்களை கண்காணிக்கும் பணியில் 8 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தெலங்கானா மாநிலத்தில் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில், கரீம்நகர் மாவட்டம், ஹுஜுராபாத் பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மொத்தம் 3 மாணவிகள் தேர்வு எழுத வேண்டியிருந்தது. இதில் ஒரு மாணவி உடல்நலக்குறைவு காரணமாக தேர்வு எழுத வரவில்லை. இதனால் 2 மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர்.

ஆனால் இதில் என்ன விசேஷம் எனில், இந்த 2 மாணவிகளை கண்காணிப்பதற்காக தலைமை கண்காணிப்பாளர், கல்வித்துறை கண்காணிப்பாளர், தேர்வு மைய கண்காணிப்பாளர், மருத்துவ உதவியாளர், 2 போலீஸார் மற்றும் 2 அதிரடி கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 8 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனிடையே பறக்கும் படையினர் கூட இவர்களை கண்காணித்து சென்றனர். இவர்களுக்கு பள்ளி சார்பில் 2 உதவியாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்