டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியுடன் மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கூட்டணி வைக்கிறது. இதற்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியாக உள்ளது.
டெல்லியில் தொடர்ந்து மூன்றுமுறை முதல் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. அடுத்து வந்த தேர்தலில் புதிய கட்சியான ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் தோற்றது.
இதேபோல், பஞ்சாப் சட்டப்பேரவையிலும் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மிக்கு 20 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். இதில் ஆளும் காங்கிரஸின் எதிர்கட்சியாக ஆம் ஆத்மி விளங்குவதால் அதனுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் தயங்கியது.
காங்கிரஸ் எதிர்கட்சிகளுடன் இணைய முற்பட்டபோது ஆம் ஆத்மியை மட்டும் ஒதுக்கி வைத்தது. எனினும், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்க ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் உதவி தேவை என எண்ணினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
இதன் காரணமாக, டெல்லி காங்கிரஸின் தலைவரான ஷீலா தீட்சித் உள்ளிட்டவர்களை மீறி ராகுல், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளார். .இதற்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியாக உள்ளது.
டெல்லியின் ஏழு மக்களவை தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 4 மற்றும் காங்கிரஸுக்கு 3-ம் கிடைக்க உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் இவர்கள் கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை; இணையத்திடம் டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘புதுடெல்லி, சாந்தினிசவுக் மற்றும் வடமேற்கு டெல்லி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும். மீதமுள்ள வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் தெற்கு
டெல்லி ஆகிய நான்கிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.’ எனத் தெரிவித்தனர்.
இதில், சாந்தினிசவுக் 2014-ல் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இங்கு காங்கிரஸில் முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபலும், ஆம் ஆத்மியில் பத்திரிகையாளரான அசுதோஷும் போட்டியிட்டு பாஜகவின் டாக்டர்.ஹர்ஷவர்தனிடம் தோற்றனர்.
இந்தமுறை மீண்டும் கபில்சிபல் காங்கிரஸ் சார்பில் அங்கு போட்டியிடுகிறார். அசுதோஷ் தன் கட்சியின் இருந்து விலகி விட்டார். இந்தமுறை டெல்லியின் ஏழு தொகுதிகளிலும் இருமுனைப்போட்டி நிலவ உள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago