எஸ்பி - பிஎஸ்பி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணியில் சேர்க்காததால் பொது வேட்பாளரை நிறுத்த உ.பி. மார்க்சிஸ்ட் கட்சி யோசனை

By ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யில் சமாஜ்வாதி (எஸ்பி) - பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) கூட்டணிமற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடதுசாரிகள் சேர்க்கப்படவில்லை. இதனால், இடதுசாரி கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்களை நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) யோசனை தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாயாவதியின் பிஎஸ்பியுடன் அகிலேஷின் எஸ்பியும், அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளமும் கூட்டணி அமைத்துள்ளன. இவர்களால் ஒதுக்கப்பட்ட காங்கிரஸ், சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வருகிறது. இந்த இரு கூட்டணிகளும் இடதுசாரி கட்சிகளை இன்னும் சேர்க்கவில்லை.

இதனால், இடதுசாரி கட்சிகள்இணைந்து உ.பி.யின் சில தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்தலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ), சிபிஎம் யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி.யின் சிபிஐ நிர்வாகிகள் கூறும்போது, ‘‘காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. உ.பி.யில் நாங்கள் கேட்கும் 10 தொகுதிகள் கிடைக்காவிட்டால், எஸ்பி - பிஎஸ்பி கூட்டணிக்கு ஆதரவளிக்கவும், ஓரிரு தொகுதிகளில் மட்டும் பொது வேட்பாளர்களை நிறுத்தவும் பரிசீலிப்போம்’’ என்றனர்.

உ.பி.யை பொறுத்த வரை இடதுசாரி கட்சிகளில் சிபிஐ.க்கு மட்டுமே ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இதனால், அக்கட்சிக்கு உ.பி.யில் மக்களவை எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்கள் ஒரு சில எண்ணிக்கையில் கிடைத்து வந்தனர். ஆனால், உ.பி.யில் கடந்த பல வருடங்களாக சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் சார்பில் எம்.பி., எம்எல்ஏ.க்கள் தேர்வாகவில்லை.

எனவே, மக்களவைத் தேர்தலில் முக்கியமான 3 தொகுதிகளில் மட்டும் பொது வேட்பாளர்களை நிறுத்தலாம் என சிபிஎம் யோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஐ நிர்வாகிகள் இன்று லக்னோவில் கூடி இறுதி முடிவு எடுக்க உள்ளனர். இடதுசாரிகளை பொறுத்தவரை அதன் உ.பி. பிரிவு அளிக்கும் பரிந்துரைகளை தேசிய நிர்வாகம் ஏற்றுக் கொள்வது வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்