ஆந்திர மாநிலத்தில் ரூ.2000 நோட்டுகள் தட்டுப்பாடு

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலத்தில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் கணிசமாக குறைந்து விட்டது. வங்கிகள், ஏடிஎம்களில் கூட 500, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டாலும், சரிவர புழக்கத்தில் இல்லை என்றே கூறுகின்றனர்.

இதற்கு ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலே காரணமென மக்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது. கடந்த 5 அல்லது 6 மாதமாகவே 2000 நோட்டுகளின் புழக்கம் நாளடைவில் குறைந்து, தற்போது தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு மாறி உள்ளது.

வியாபாரிகள், தனியார் கல்வி நிறுவனங்கள் தினமும் தங்கள் வங்கிக் கிளையில் செலுத்தும் பணத்தில் கூட ரூ.2000 நோட்டுகள் காணப்படவில்லை என ஒரு வங்கி அதிகாரி தெரிவித்தார். ஏடிஎம்களில் கூட 2000 ரூபாய்நோட்டுகள் இல்லை. சில மாதங்களுக்கு முன் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் களில் வந்ததை மாற்றுவதற்கு கஷ்டப்பட்ட மக்கள், தற்போது ரூ.2000 நோட்டுகள்எங்கும் இல்லை என கூறும்அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. 2018 மார்ச் மாதத்தில் நாட்டில் 18.3 லட்சம் கோடி பணத்தில்37.3 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. மேலும், 43 சதவீதம் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் கூட 2000 நோட்டுகள் மக்களிடையே புழக்கத்தில் இருந்துள்ளன. சமீபகாலமாக இதுகுறைந்து விட்டது என குண்டூரில் உள்ள ஒரு வங்கி அதிகாரிதெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் தேர்தல்கள் நெருங்குவதால், 2000 நோட்டுகளை அரசியல் கட்சியினர் கையகப்படுத்தி விட்டார்கள் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்