திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் புட்டா சுதாகர் யாதவ், பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவராக உள்ள புட்டா சுதாகர் யாதவை, கடப்பா மாவட்டம், மைதுகூரு சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட்டால் இவர் அறங்காவலர் குழுத் தலைவர் பதவியைராஜினாமா செய்ய வேண்டும்.
அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, உமா மகேஷ்வர ராவ், ராயபாட்டி சாம்பசிவ ராவ்ஆகியோர் ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டனர். இவர்களது ராஜினாமாவை அரசு ஏற்றுக் கொண்டது. புட்டா சுதாகர் யாதவும் தனது அறங்காவலர் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இன்றோ அல்லது நாளையோ இவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ராஜினாமா செய்தால் அறங்காவலர் குழு முழுவதும் ரத்து செய்யப்படும். தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பதவியேற்ற பிறகு புதிதாக அறங்காவலர் குழு அமைக்கப்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago