தூக்கில் இடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவின் மகன் காலிப் குரு, இந்திய அரசிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2011 நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் முகமது அப்சல் குரு. இவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை அடுத்து, டெல்லி, திஹார் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார்.
இதற்கிடையே 2016-ல் முகமது அப்சல் குருவின் மகன் காலிப் குரு, 10-ம் வகுப்புத் தேர்வில் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார். குறிப்பாக 500-க்கு 474 மதிப்பெண்கள் பெற்று 5 பாடங்களிலும் அவ ருக்கு ‘ஏ1’ கிரேடு பெற்றிருந்தார்.
தனது தந்தை தீவிரவாத குற்றச்சாட்டுக்குள்ளாகி தூக்கி லிடப்பட்ட போதிலும், காலிப் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்ததாக சமூக இணையதளங்களில் பாராட்டுகள் குவிந்தன. அதேபோல 12-ம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தார் காலிப்.
இந்நிலையில், காலிப் குரு , இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ''எனக்கு பாஸ்போர்ட் அவசியத் தேவையாக இருக்கிறது. இதற்காக விண்ணப்பித்திருக்கிறேன். என்னிடம் ஆதார் அட்டையும் உள்ளது. எனக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டால், சர்வதேச மருத்துவ ஸ்காலர்ஷிப்பை என்னால் பெறமுடியும். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
41 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago