ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்ட எஸ்.பி. ராகுல் தேவ் சர்மா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சென்னையை அடுத்துள்ள ரெட் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி வீர ராஜ்குமார் (42). இவர், கடந்த 5 ஆண்டுகளாக சேஷாசலம் வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டி, சீனா, நேபாளம், மியான்மர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கடத்தி வந்தார். இவர் மீது ஆந்திர மாநிலம், சித்தூர், திருப்பதி, கடப்பா, நெல்லூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது கூட்டளியான சுப்புராஜை கடப்பா போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், குருசாமி வீர ராஜ்குமார் குறித்து சில தகவல்கள் கிடைத்தன. அதன் பேரில், சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் இருந்த குருசாமி வீர ராஜ்குமாரை கடப்பா போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்படி, நேற்று கடப்பாவில் இருந்து செம்மரங்களை வெட்டி லாரியில் கடத்திச் சென்ற அவரது கூட்டாளிகளான சிவா (28) மற்றும் நாராயணா (37) ஆகிய இருவரையும் ரயில்வே கோடூரு அருகே கைது செய்தோம். இவர்களிடமிருந்து ஒரு லாரி மற்றும் 60 செம்மரங்களை பறிமுதல் செய்தோம். இதன் மதிப்பு ரூ.3 கோடியாகும். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கு பாராட்டுகள். இவ்வாறு ராகுல் தேவ் சர்மா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago