அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

By பிடிஐ

உலகிலேயே காற்று மாசு அதிகமாக உள்ள 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக  புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது, இதில் காஸியாபாத், பரிதாபாத், நொய்டா, பிவாடி ஆகியவை டாப் 6 மாசடைந்த நகரங்களாகத் திகழ்கிறது.

 

கடந்த ஆண்டு உலகிலேயே மிகவும் மோசமான மாசடைந்த நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி இருந்துள்ளதை புதிய தரவுகள் நிரூபித்துள்ளன.

 

சமீபத்திய தரவுகள் IQAir AirVisual 2018 World Air Quality Report என்ற அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளாது. இது தெற்காசிய கிரீன்பீஸ் அமைப்புடன் இணைந்து இந்த அறிக்கைத் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

உலகின் 20 மாசடைந்த நகரங்களில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் மட்டும் 18 நகரங்கள் உள்ளன.  ஆனாலும் இதில் 15 அதிமாசடைந்த நகரங்களைக் கொண்டுள்ளது இந்தியா.  பரிதாபாத், பிவாடி, நொய்டா ஆகியவை டாப் 6-ல் இடம்பெற்றுள்ளது, டெல்லி 11வது இடத்தில் உள்ளது.

 

சீனாவின் தலைநகர் பெய்ஜிங் ஒரு காலத்தில் அதி மாசு நகரமாக இருந்தடு தற்போது இந்த அறிக்கையின் தரவுகளின் படி 122வது இடத்தில் உள்ளது.

 

மொத்தம் 3,000 நகரங்கள் அதி மாசுப்பட்டியலில் இருப்பதால் உலகச் சுகாதார அமைப்பு இந்த நகரங்களில் சுகாஹ்டார அவசரநிலை இருந்து வருவதாக எச்சரித்துள்ளது.

 

“தொழிற்சாலைகள், வீடுகள், கார்கள், ட்ரக்குகள் ஆகியவை சிக்கலான, கலவையான மாசுகளை வெளியேற்றி வருகிறது, இவை அனைத்தும் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பது, இதில் மனிட உடல் நலத்துக்கு கடும் தீங்கு விளைவிப்பது நுண் துகள் வஸ்துவாகும்” என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

 

அதாவது எரிபொருள் பயன்பாடுதான் பிரதான காரணம், வாகனங்கள், மின் ஆலைகள், தொழிற்சாலைகள், வீடுகள், வேளாண் மற்றும் பயோமாஸ் எரிப்பு ஆகியவை நகரங்களின் மாசுக்கு அதிகாரணமாக விளங்குகிறது.

 

“அரசியல் அறிக்கைகள் விடாமல் சுத்தமான காற்றுக்கு அரசாங்கங்கள் சீரிய திட்டமிடல் செய்ய வேண்டியுள்ளது” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் சமூக செயல்பாட்டாளர் புஜாரினி சென், “கண்ணுக்குத் தெரியாத இந்த கொலைகார மாசு சக்தியை குறைக்க அரசுகள் செயல்படுவது அவசியம் என்பதை இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது. நாம் சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டுமெனில் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும். வெறும் அரசியல் முத்துதிர்ப்புகள் போதாது” என்றார்.

 

இன்னொரு சுற்றுசூழல் ஆர்வலரும் ‘மை ரைட் டு பிரீத்’ விழிப்புணர்வு பிரச்சாகருமான ரவீணா கோலி, நாட்டில் பொதுச்சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியல் உறுதிப்பாடு கொஞ்சம் கூட இல்லை, சுகாதார பிரச்சினைகள் வரலாற்று ரீதியாக வாக்குகளாக மாறாது என்பதால் அரசியவாதிகள் பட்ஜெட்டில் அதற்கு குறைவான நிதியையே ஒதுக்குகின்றனர். இதனால் குடிமக்கள் வாழ்க்கையுடன் ஆட்சி அதிகாரமும், அரசியல்வாதிகளும் சமரசம் செய்துவிடுகின்றனர்.  உண்மையான தலைவர்கள் ஆட்சியில் இருந்தால் அரசியல் ஆதாயங்களை விட மனித உயிர்களுக்கு மதிப்பு இருக்கும், என்று வேதனை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE