மக்களவைத் தேர்தலுக்கு டெல்லியில் மகளிர் மட்டும் வாக்குச்சாவடி

By ஆர்.ஷபிமுன்னா

மக்களவைத் தேர்தலில் மகளிர் மட்டும் வாக்குச்சாவடி டெல்லியில் அமைய உள்ளது. நாட்டில் முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதில், பெண் அலுவலர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்கள் டெல்லியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையும் சேர்த்து டெல்லியில் இந்த முறை 1.39 கோடி பேருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. இவர்களில் ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் முறையே 76,61,680, 62,35,814 என உள்ளனர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 647 எனவும் உள்ளனர்.

இதில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டி ஒரு வித்தியாசமான முயற்சியை டெல்லி தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இதன்படி, அமைக்கப்பட உள்ள மகளிர் மட்டும் வாக்குச்சாவடிகள் பெண்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து டெல்லி மாநில தேர்தல் ஆணையர் ரன்பீர் சிங் கூறும்போது, ''மகளிர் மட்டும் வாக்களிப்பதற்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதில், தலைமை மற்றும் உதவி அலுவலர் முதல் உதவியாளர் வரை அனைவருமே பெண்களே பணியாற்றுவார்கள்'' எனத் தெரிவித்தார்.

எனினும், வேட்பாளர்களின் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆண்களாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, அவர்களையும் பெண்களாக அமர்த்த அரசியல் கட்சிகளுக்கு டெல்லியின் தேர்தல் ஆணையம் கோருவது குறித்து யோசனை செய்து வருகிறது.

டெல்லியில் மக்களவைக்கான ஏழு மற்றும் சட்டப்பேரவைக்கான 70 தொகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2,696 இடங்களில் மொத்தம் 13,816 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளன.  இவற்றில் ஒன்றாக மகளிர் மட்டும் வாக்குச்சாவடி இருக்கும். மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக டெல்லியில் தேர்தல் ஆணையம் சார்பில் வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில், மே 12-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்கி ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதன் முடிவுகள் மே 23-ல் வெளியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்