ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100-வது நினைவு நாள்: மன்னிப்பு கேட்கத் தயாராகிறது பிரிட்டிஷ் அரசு

By ஆர்.ஷபிமுன்னா

ஆங்கிலேயர் ஆட்சியில் ஏப்ரல் 13, 1919-ல் பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையில் சுமார் 1600 பேர் கொல்லப்பட்டனர். இதன் நூறாவது நினைவு நாள் வருவதை முன்னிட்டு பிரிட்டிஷ் அரசு இந்த படுகொலைக்கு மன்னிப்பு கேட்கத் தயாராகிறது.

ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைப்பட்டிருந்த போது, 1919-ல் ரவுலட் சட்டம் அமலாக்கப்பட்டது. இதை எதிர்க்கும் வகையில், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் எனும் இடத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கூடினர். ஏப்ரல் 13, 1919-ல் ஞாயிற்றுக்கிழமையான அன்று சீக்கியர்களின் புது வருடமான பைசாக்கி பண்டிகை நாளாகவும் இருந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப் போராட்டப் பாடல்களையும் அந்த கூட்டத்தினர் பாடிக்கொண்டிருந்தனர். அங்கு தன் படையுடன் வந்த ஆங்கிலேய அதிகாரியான ஜெனரல் டயர், கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 1600-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்திற்கும் அதிமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பிரிட்டிஷ் வரலாற்றில் அவமானமாக இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என சமீப ஆண்டுகளாகக் குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், அந்த படுகொலை சம்பவம் நடந்து வரும் ஏப்ரல் 13-ல் 100 ஆண்டு முடிய உள்ளது. இதையொட்டி பிரிட்டிஷ் நாட்டு நாடாளுமன்றக் கூட்டத்தை அதன் அரசு கூட்டுகிறது. இதில், இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் ஜாலியன்வாலா பாக் சம்பவத்திற்கு பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்த உள்ளனர். அந்த சமயத்தின்போது சில இந்தியர்களையும் பார்வையாளர்களாக அழைக்க இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, அவர்களில் ஒருவரான லும்பா என்பவர், இந்தியாவின் பிரபல தொழிலதிபரான சஞ்சய் டால்மியாவிற்கு இமெயில் மூலம் அழைப்பு அனுப்பியுள்ளார்.

இந்த அழைப்பு மெயிலில் குறிப்பிட்டிருப்பதாவது, ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை மீது விவாதிக்க வேண்டும் என நான் எழுப்பிய கோரிக்கைக்கு சக உறுப்பினர்களான லார்டு தேசாய், லார்டு பிலிமோரியா, போரன்ஸ் வர்மா, லார்டு சூரி, பரோன்ஸ் நோர்தோவர், லார்டு அல்டன், லார்டு மோர்கன், லோர்டுகோலின் மற்றும் லார்டு மோவ்ஸன் ஆகியோரும் ஆதரவளித்துள்ளனர். இவர்களும் அந்த சம்பவத்திற்கு பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கோர வேண்டும் என மனப்பூர்வமாக சம்மதித்துள்ளனர்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரிட்டிஷில் வாழும் பல்வேறு பொது அமைப்புகள், சீக்கியர்களின் சர்வதேச சங்கங்களும் வலியுறுத்திக் கடிதங்கள் எழுதியுள்ளன. இவற்றையும் ஏற்று ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க பிரிட்டிஷ் அரசு தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்த மன்னிப்பு கேட்கும் நிகழ்வின்போது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அழைப்பாளர்களாக முக்கிய இந்தியர்களையும் அழைக்கிறது.

ஜாலியன்வாலா பாக் எனும் மைதானப் பகுதி அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோயில் அருகே அமைந்துள்ளது. சீக்கியர் ஆட்சியின் கீழ் இந்த மைதானத்தின் உரிமையாளராக ஹிம்மத் சிங் என்பவர் இருந்தார். இவர், தற்போது பஞ்சாபின் ஃபதேகர் சாஹேப் மாவட்டத்தில் உள்ள ஜாலா எனும் கிராமத்தை சேர்ந்தவர். இதனால், அது ஜாலாவாலா மைதானம் எனவும், பிறகு அது தோட்டமாகவும் இருந்ததால் பாக் என்றும் அழைக்கப்பட்டது. இந்த பெயரும் காலப்போக்கில் ஜாலியன்வாலா பாக் என்றாகி விட்டது. ஆங்கிலேயர் நடத்திய படுகொலைக்கு பின் இந்த பகுதி மத்திய அரசின் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்