பாகிஸ்தான் வேட்பாளர்களாக இருப்பினும் கை சின்னத்தில் வாக்களியுங்கள்: உ.பி.யில் காங்கிரஸ் ஆதரவு தலைவர் பேச்சால் சர்ச்சை

By ஆர்.ஷபிமுன்னா

பாகிஸ்தான் வேட்பாளர்களாக இருப்பினும் கை சின்னத்தில் வாக்களிக்கும்படி காங்கிரஸ் ஆதரவு அமைப்பின் தலைவர் உ.பி.யில் அளித்த பேச்சால் சர்ச்சை கிளம்பியுள்ளது. அம்மாநிலத்தில் அதிகமுள்ள முஸ்லிம் வாக்குகளைப் பெற வேண்டி காங்கிரஸ் தலைமை மவுனம் காப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள மக்களவைத் தொகுதி முராதாபாத். இங்கு முஸ்லிம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் பெரும்பாலும் அச்சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்கள் வெல்வது வழக்கம். எனினும், 2014-ல் வீசிய மோடி அலையால் அங்கு பாஜகவின் வேட்பாளரான குன்வர் சர்வேஷ் குமார் வென்றிருந்தார்.

இந்தமுறை, அங்கு மீண்டும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி காங்கிரஸ் வெற்றி பெற முயல்கிறது. இதன் முயற்சியாக அங்கு நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் ஆதரவு கட்சிகளில் ஒன்றான மஹான் தளம் தலைவர் கேசவ் தேவ் மவுர்யா பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

இதில் மஹான் தளம் தலைவர் மவுர்யா கூறும்போது, ''போட்டியிடும் காங்கிரஸின் வேட்பாளர் யார் எனப் பார்க்க வேண்டாம். அவர் நல்லவரா, கெட்டவரா, உள்ளூரா. வெளியூரா அல்லது பாகிஸ்தானை சேர்ந்தவராக இருப்பினும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இது, மஹான் தளம் சார்பில் மக்களவை தேர்தலுக்கானக் கோரிக்கை ஆகும்'' எனத் தெரிவித்தார்.

உ.பி.யின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆதரவுக் கட்சியாக 2008-ல் தொடங்கப்பட்டது மஹான் தளம். 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்த கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதில் ஒன்றில் கூட மஹான் தளம் வெற்றி பெறவில்லை. பல தொகுதிகளில் அதன் வேட்பாளர்கள் தங்கள் வைப்புத்தொகையையும் இழந்தனர். எனினும், மஹான் தளம் கட்சியுடன் காங்கிரஸ் மீண்டும் 2019 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி அமைத்துள்ளது.

சித்து கிளப்பிய சர்ச்சை

இதற்கு முன், பிப்ரவரி 15-ல் பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் அமைச்சரான நவ்ஜோத்சிங் சித்துவும் கருத்து கூறி இருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் புல்வாமா தாக்குதல் மீது பாகிஸ்தானியர்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையானது.

அதில் அவர், குறிப்பிட்ட சிலரது தவறுக்காக பாகிஸ்தான் நாட்டினர் அனைவரையும் குற்றம் கூறக் கூட முடியாது எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சித்து மும்பை தொலைக்காட்சி செய்திகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மவுனம்

எனினும், சித்து கூறிய சர்ச்சைக் கருத்திற்கு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காங்கிரஸ் மவுனம் காப்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்