மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற இருந்த பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பங்கேற்க இருந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதிஅளிக்க மறுத்துவிட்டது.
மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 200 தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாகப் பிரதமர் மோடி நேற்று துர்காபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் மால்டா மாவட்டம், வடக்கு தினாஜ்பூரில் பாஜக பேரணி இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைக்கப்பட்டு இருந்தார்., பலூர்காத் பகுதியில் அவருடைய ஹெலிகாப்டரை தரையிறக்கி அங்கிருந்த பேரணி இடத்துக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால், எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி திடீரென உ.பி. முதல்வரின் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதனால், பேரணியில் பங்கேற்க உ.பி. முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டது என பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, காணொலிக் காட்சி மூலம் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பேரணியில் உரையாற்ற இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாஜக தலைவர் முகுல் ராய் கூறுகையில், " மேற்கு வங்க அரசு ஜனநாயகத்தைப் படுகொலை செய்கிறது. ஜனநாயகத்துக்கு விரோதமான மனநிலையுடன் நடந்து கொள்கிறது. பலூர்காட் பகுதியில் உள்ள ஹெலிபேடில் உ.பி.முதல்வர் ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது. அவருக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான மனநிலையைத்தான் காட்டுகிறது " எனத் தெரிவித்தார்.
இது குறித்து மால்டா மாவட்ட நிர்வாகம் சார்பில் பாஜகவிடம் கூறுகையில், " மால்டாவில் உள்ள ஹோட்டல் கோல்டன் பார்க்கில் உள்ள ஹெலிபேடில் இன்று முதல்வர் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டரும் புறப்பட்டு, தரையிறங்க இருக்கிறது. விமான ஓடுதளத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் ஏராளமான பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஆதலால், ஹெலிபேடில் ஒரு ஹெலிகாப்டருக்கு மட்டுமே அனுமதி தரமுடியும் " என விளக்கம் அளித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago