கர்நாடக அரசியலில் நாளுக்கு ஒரு திருப்பம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அந்த வரிசையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறார் பிரதமர் ஆனால் அவரது கட்சிப் பிரமுகர் குதிரை பேரம் செய்கிறார். எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கு எடியூரப்பா பணம் கொடுக்க முன்வந்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று கூறி ஆடியோ டேப்பையும் வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாட்டின் ஜனநாயகத்தைப் பிரதமர் சிதைத்துக் கொண்டிருக்கிறார். தேச மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் பிரதமரின் பொய்களை வெளிக்கொண்டுவர வேண்டும்.
ஒருபுறம் அவர் நாட்டுக்கும் அரசியல்வாதிகளிக்கும் போதனைகளைத் தருகிறார். மறுபுறம் கருப்புப் பண புழக்கத்தை ஊக்குவித்து ஜனநாயகத்தை சிதைக்கிறார். இதை நான் இப்போதே ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன்.
கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, மஜத கட்சியின் எம்.எல்.ஏ., நகன்கவுடாவின் மகன் சரானாவிடம் பேசி ரூ.25 லட்சமும் அவரது தந்தைக்கு அமைச்சர் பதவியும் வழங்குவதாகத் தெரிவித்த ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது.
எடியூரப்பா அரசியலில் எனக்கு மூத்தவர். ஒருவேளை எங்களுக்கு பெரும்பான்மை இல்லை என அவர் நினைத்திருந்தால் ஏன் இதுநாள்வரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவில்லை" என்று வினவினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago