தெலங்கானாவில் தேர்தல் முடிந்து 66 நாட்கள் கழித்து மேலும் 10 அமைச்சர்கள் பொறுப்பேற்பு

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்து 66 நாட் கள் கழிந்த நிலையில், 10 அமைச் சர்கள் நேற்று பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

அண்மையில் நடந்து முடிந்த தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, தனிப் பெரும்பான்மை யுடன் சந்திரசேகர ராவ் 2-வது முறையாக அம்மாநிலத்தின் முதல் வராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றார்.

இவரது மகனான கே. டி. ராமா ராவ் தற்போது தெலங்கானா ராஷ் டிர சமிதி கட்சியின் செயல் தலை வராக நியமனம் செய்யப்பட்டுள் ளார். இவர், கடந்த ஆட்சியின் போது, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பணியாற்றி னார். இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில், ஹைதராபாத் தில் உள்ள ஆளுநர் மாளிகையில் மேலும் 10 பேர் அமைச்சர்களாக பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்ட னர். இதில் 4 பேருக்கு மட்டுமே மீண் டும் அமைச்சர் பதவி வழங்கப்பட் டுள்ளது. முதல்வரின் மகன் கே. டி.ராமாராவுக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்