நாடு முழுவதிலும், 'வந்தே மாதரம்' எனும் பெயரில் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) ஊர்வலம் நடத்துகிறது. இது, புல்வாமா தாக்குதலின் பெயரில் மக்களவைத் தேர்தலில் ஆதாயம் பெறும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
தீவிரவாதத் தாக்குதலில் பலியான 44 சிஆர்பிஎப் வீரர்களின் தியாகங்களை ஊர்வலத்தில் முன்னிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் தம் தோழமைக் கட்சியான பாஜகவினரையும் சேர்ந்து கொள்ளும்படி விஎச்பி கோரியுள்ளது.
இதற்கான அறிவிப்பை விஎச்பியின் மூத்த தலைவரான விமலேஷ் குமார் உ.பி. செய்தியாளர்களிடம் அளித்தபோது, ''பாகிஸ்தான் மீது இந்திய மக்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால், தம் அண்டை நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.
இதற்காக, தானாகவே வெளியில் வந்து பாகிஸ்தானுக்கு எதிராக பொதுமக்கள் குரல் தந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவை மட்டும் விஎச்பி அளிக்க விரும்புகிறது. இதன் தேவையைப் பொறுத்து அவர்கள் போராட இடமும், தேசியக் கொடிகளையும் அளிக்கத் தயாராக உள்ளது'' எனத் தெரிவித்தார்.
இதுபோன்ற செயல், மக்களவைத் தேர்தல் சமயம் என்பதால் அதில் அரசியல் லாபம்பெற வேண்டி பாஜகவுடன் சேர்ந்து விஎச்பி செய்வதாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் மீதான பத்திரிகையாளர் கேள்விக்களுக்கான பதிலில் விமலேஷ் குமார் உறுதியாக மறுத்துள்ளார்.
தனது பதிலில் அவர், ''தேசப்பற்றை தேர்தலுக்கான பார்வையில் பார்ப்பது தவறு. இந்துத்துவா கொடிகள் உயரப் பறப்பது நாட்டின் உறுதியைக் காட்டும். இதை நரேந்திர மோடியால் மட்டுமே செயலாக்க முடியும் என நாட்டு மக்கள் நம்புகின்றனர்'' எனக் கூறினார்.
சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பில் மீண்டும் பிரதமராக மக்கள் மோடியையே விரும்புவதாகவும், அது விஎச்பியால் எடுக்கப்பட்டது அல்ல என்றும் விமலேஷ் குமார் மேலும் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago