பிரதமர் மோடிக்கு எதிரான அணியில் இருந்து பிரிந்த கட்சிகளால் தேர்தலுக்கு பின் பலன் பெறும் பாஜக

By ஆர்.ஷபிமுன்னா

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகசுமார் 25 கட்சிகள் ஒன்றாக அணிவகுத்து வந்தன. இதில் இருந்து சில கட்சிகள் தற்போது பிரிந்ததன் பலன், மக்களவை தேர்தலுக்கு பின் பாஜகவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்டியலில் ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தளத்தின் தலைவருமான நவீன் பட்நாயக், தெலங்கானா ராஷ்டிர சமிதியின்தலைவரும் அம்மாநில முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் மற்றும்ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் பிரதமர் மோடிக்கு எதிரான அணியில் இருந்து வெளியேறி தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள் மூவரும் தேர்தலுக்கு பின் பாஜகவிற்கு ஆதரவளிக்கும் வாய்ப்பு உள்ளது. காங்கிரஸுக்கு எதிரான இந்த கட்சிகளுக்கு மூன்று மாநிலங்களில் சேர்த்து சுமார் 50 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இவர்களை போல் தமிழகத்தின் கட்சியான அதிமுகவிற்கு கிடைக்கும் தொகுதிகளாலும் பாஜகவேபலன்பெறும் எனக் கருதப்படுகிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தவிர மற்றமூன்று கட்சிகளுமே நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான அரசுக்கு பல சமயங்களில் உதவிஇருந்தன. எனவே, பிரதமர் மோடிக்கு எதிரான அணியில் இருந்து இக்கட்சிகளின் வெளியேற்றம் மீண்டும் பாஜகவிற்கே உதவும் எனக் கருதப்படுகிறது.

கடந்த 2014 தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்ற பாஜக தலைமையிலான அரசின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அப்போது அவரை எதிர்த்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்,தன் எதிர்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருடன் இணைந்து கூட்டணி அமைத்தார். அதுவும் வலுவிழந்தது.

பிறகு, முலாயம்சிங் யாதவ் தலைமையில் ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த கட்சிகள் பலவும் பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்றிணைய முயன்றன. இதிலும் முன்னேற்றம் இன்றி அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. அடுத்து குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அமோக ஆதரவு கிடைத்தது. இதேபோல், கர்நாடகா சட்டப்பேரவையில் அதிக தொகுதிகள் கிடைத்தும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இங்கு மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவளித்த காங்கிரஸால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வராக டி.குமாரசாமி பதவி ஏற்பு விழாவுக்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றுகூடி, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க அச்சாரமிட்டன.

எனினும், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்க மனமில்லாமல் ஒவ்வொருவராக விலகத் துவங்கினர். மாறாக தாமே பிரதமராகும் முயற்சியில் சில தலைவர்கள் இறங்கினர். இவர்களில் ஒருவரான மாயாவதி, தமது பகுஜன் சமாஜுடன், அகிலேஷிசிங் யாதவின் சமாஜ்வாதியுடன் சேர்ந்து உ.பி.யில் கூட்டணி அமைத்தார். மற்ற முக்கியத் தலைவர்களில் ஆந்திரா முதல்வரும் தெலுங்குதேச தலைவருமான சந்திரபாபு நாயுடு, தெலுங்கானாவில் கூட்டணி அமைத்தும் பலனில்லாமல் போனது. மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் இடதுசாரிகள் விலகியே நின்றபடி பாஜகவை எதிர்த்து வருகின்றனர்.

மகராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம்,தமிழகத்தில் திமுக போன்ற கட்சிகள் மட்டுமே, மாநில அளவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருப்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்