நேற்று லக்னோ வந்த பிரியங்கா வதேராவிற்கு சுமார் இரண்டு லட்சம் பேர் கூடி வரவேற்பளித்தனர். இதனால், விமான நிலையம் முதல் அலுவலகம் வரை 20 கி.மீ. கடந்து செல்ல ஐந்து மணி நேரம் ஆனது.
தன் சகோதரி பிரியங்காவை தேசிய பொதுச்செயலாளராக்கி தீவிர அரசியலில் இறக்கியிருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதையடுத்து பிரியங்கா முதன்முறையாக நேற்று உ.பி. வந்திருந்தார். மதியம் 12 மணிக்கு லக்னோ விமான நிலையம் வந்திறங்கினார் பிரியங்கா. இவருடன் ராகுல் மற்றும் உ.பி.யின் மற்றொரு புதிய பொதுச்செயலாளரான ஜோதிர்ஆதித்ய சிந்தியாவும் வந்திருந்தனர்.
சிறிய பேருந்தின் மேற்புறம் அமர்ந்து பிரியங்கா ஊர்வலம் வந்தார். இவர்கள் பின் பாதுகாப்பு அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். கடைசியில் உ.பி. மற்றும் தேசிய காங்கிரஸ் நிர்வாகிகளும் இருந்தனர். பிரியங்காவால், உற்சாகமடைந்த உ.பி. காங்கிரஸார் பிரியங்காவிற்கு பலத்த வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர். இவர்களுடன் அம்மாநிலத்து பொதுமக்களும் பிரியங்காவை ஆர்வமாகக் காணக் குவிந்திருந்தனர்.
காங்கிரஸ் அலுவலகம் வரை வழிநெடுக பிரியங்காவிற்கு மாலை அணிவித்தும், ரோஜா இதழ்களைத் தூவியும் வரவேற்றனர். இதற்காகக் கூடிய கூட்டம் உ.பி. ஆளும் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷமிட்டது. இதைக் கண்டும், கேட்டும் ரசித்த பிரியங்கா கூட்டத்தினர் இடையே கை அசைத்தும், புன்முறுவல் பூத்தும் ஆதரவைத் தெரிவித்தார். இதற்கு முன் 2004-ல் திடீர் என மக்களவைத் தேர்தலில் குதித்த ராகுலுக்கும் இந்த அளவிலான கூட்டம் கூடியதில்லை.
இதற்காக, கடந்த ஒரு வாரமாக உ.பி. காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் தலைமையில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. நேற்று காலை முதல் திரண்ட கூட்டத்தை உற்சாகப்படுத்த வேண்டி பல ஆயிரக்கணக்கான பொட்டலங்களில் உணவு, தேநீர் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
ஹசரத்கன்சில் கூடியிருந்த இளைஞர் அணியினர், பிரியங்காவின் படம் போட்ட சட்டையை அணிந்து அவரை வரவேற்றனர். இதன் வாசகம், ''நாட்டிற்காக உழைக்கும் பிரியங்காவிற்காக உயிரையும் கொடுப்போம்'' என்றிருந்தது.
தலைவர்கள் சிலைக்கு மாலை
சாலையோரப் பிரச்சாரத்தில் வழியில் வந்த டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர், மஹாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரின் சிலைகளுக்கும் ராகுல், பிரியங்கா, சிந்தியா மாலை அணிவித்தனர்.
தேநீர் கடையில் பிரியங்கா
லக்னோவின் பழம்பெருமை வாய்ந்த முக்கிய தேநீர் கடையையும் பிரியங்கா விட்டு வைக்கவில்லை. லால்கன்சில் உள்ள அக்கடையில் அனைவரும் பொதுமக்கள் இடையே அமர்ந்து தேநீர் அருந்திய செய்தி படத்துடன் உ.பி.வாசிகள் இடையே வைரலானது.
கோன் ஐஸ் சாப்பிட்ட பிரியங்கா
சாலையோரம் தள்ளுவண்டியில் ஐஸ் விற்றவரிடம் கோன் ஐஸ் கேட்டார் பிரியங்கா. இதை அவரிடம் ஐஸ்காரம் தூக்கி வீச லாவகமாக கைகளில் பிடித்த பிரியங்கா, தம் சகோதரர் ராகுலுக்கும் கொடுத்தார்.
ராகுல் பேச்சு
இந்த சாலையோரப் பிரச்சாரத்தின் இறுதியில் பேசிய ராகுல், ''மத்தியிலும், உ.பி.யிலும் காங்கிரஸ் அரசு திரும்பும் வரை நாங்கள் ஓயமாட்டோம்'' எனத் தெரிவித்தார்.
இந்திரா காந்தி அறை
இந்த நிகழ்ச்சிக்காக ராஜஸ்தான், பிஹார் மற்றும் தராகண்ட் மாநிலங்களில் இருந்தும் தம் தொண்டர்களை காங்கிரஸார் அழைத்திருந்தனர். லக்னோவில் காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள நேரு பவனில் இந்திரா காந்தி அந்தக் காலத்தில் அமர்ந்த அறை பிரியங்காவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago