மேற்கு வங்க மாநில புருலியா மாவட்டத்தில் பாஜகவினர் 3 பேர் கொல்லப்பட்டது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி ஏ.கே.சிக்ரி திடீர் கேள்வி ஒன்றை மேற்கு வங்க அரசு சார்பாக வாதிட்ட வழக்கறிஞரிடம் கேட்க, பதிலுக்கு அவரும் அதே பாணியில் இன்னொரு கேள்வியை எழுப்ப அந்த அமர்வு களைகட்டியது.
சக்திபாத் சர்கார், திருலோச்சன் மஹாதோ, துலால் குமார் ஆகிய பாஜக தொண்டர்கள் கொலைசெய்யப்பட்டது தொடர்பான வழ்க்கு விசாரணை நடைபெற்றது.
வழக்கறிஞரும் பாஜக தலைவருமான கவுரவ் பாட்டியா பாஜக தொண்டர்கள் 3 பேர் கொல்லப்பட்டதை விவரமாக நீதிபதிகள் முன்னிலையில் எடுத்து வைக்க, நீதிபதி ஏ.கே.சிக்ரி, “இது அரசியல் அல்ல என்றால் பின் மேற்கு வங்கத்தில் என்னதான் நடக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மேற்கு வங்க அரசைப் பிரதிநிதித்துவம் செய்த வழக்கறிஞர் கபில் சிபல், “சிபிஐ-யில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது. மனுதாரர் கூறுவது அனைத்தும் அரசியல்தானே” என்று சற்றும் எதிர்பாராத ஒரு மறுகேள்வியை எழுப்பினார்.
முன்னதாக பாஜக தலைவரும் வழக்கறிஞருமான பாட்டியா, ’பாஜக தொண்டர்களில் ஒருவரின் உடல் உயர் அழுத்த மின்கம்பத்தில் தொங்கியது, திரிணமூல் காங்கிரஸின் அரசியல் வன்முறைக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்’ என்றார்.
இதற்குத்தான் நீதிபதி திடீர் கேள்வி எழுப்ப, கபில் சிபல் திடீர் பதிலை அளித்தார்.
பிறகு கபில் சிபல், உச்ச நீதிமன்றம் கிரிமினல் வழக்குகளில் தரவுகள் எனும் பிரதேசத்துக்குள் நுழைவது கூடாது, அடிப்படை ஆதாரம் என்பது நடுவர் நீதிமன்றத்திலேயே வாதாடி முடித்த விவகாரம் என்றார்.
ஒரு கட்டத்தில் நீதிபதி சிக்ரி, பாட்டியாவிடம் மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை நடத்த முடியுமா முடியாதா என்று கேள்வி எழுப்பினார், ஏனெனில் சிபிஐ சட்ட எல்லையிலிருந்து மேற்கு வங்கம் தன்னை ஒதுக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அப்போது கபில் சிபல் குறுக்கிட்டு, “சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு எந்தவித தடையும் இல்லை” என்றார். ஆனால் தரவுகள் பற்றி இந்த கோர்ட் முடிவெடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
இந்த வாதங்களை அடுத்து கோர்ட் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago