தெலங்கானா அமைச்சரவையில் விரைவில் 2 பெண் எம்எல்ஏ.க்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானா சட்டப்பேரவைக்கு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. அக்கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ், மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். அப்போது ஒருவர் மட்டுமே அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் தேர்தல் முடிந்து 66 நாட்கள் கழித்து அமைச்சரவையை முதல்வர் கடந்த செவ்வாய்க்கிழமை விரிவுபடுத்தினார். இதில் 10 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இவர்களில் பெண் அமைச்சர்கள் எவரும் இடம்பெறவில்லை.
சந்திரசேகர ராவ் கடந்த 2014-ல் முதல்முறையாக ஆட்சியை பிடித்தபோதும் இவரது அமைச்சரவையில் பெண்கள் இடம்பெறவில்லை.
இதனால் சந்திரசேகர ராவ் பெண்களுக்கு எதிரானவர் என காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் பேசும்போது, “தெலங்கானா அமைச்சரவையில் விரைவில் 2 பெண்களுக்கு இடம் அளிக்கப்படும்” என்றார்.
இதன் மூலம் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக டிஆர்எஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago