அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் புதிய திருப்பம்: அப்ரூவராக மாறும் ராஜீவ் சக்சேனா

By ஏஎன்ஐ

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாற விரும்புவதாக, பாட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

 

ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

 

இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.

 

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதேபோல ஹெலிகாப்டர் பேர  ஊழலில் ரூ.90 கோடி மோசடி செய்ததாக ராஜீவ் ஷாம்செர் பகதூர் சக்சேனா கடந்த மாதம் 31-ம் தேதி துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டார். மூன்று நாட்கள் விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரைக் காவலில் வைக்க உத்தரவிட்டது

 

சிறையில் இருந்த அவர், பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, வெளியில் உள்ளார். இந்நிலையில் தற்போது அப்ரூவராக மாற விரும்புவதாகக் கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

இது ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்