மேகாலயாவில் வெள்ளம்: பலி 21 ஆக அதிகரிப்பு

By பிடிஐ

மேகாலயாவின் காரோ மலைப்பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 24 பேர் உயிரிழந் திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேகாலயா மாநிலத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கன மழையால், 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காரோ மலைப்பகுதியில் உள்ள 3 மாவட்டங் களில் வெள்ளப் பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷில்லாங்கில் நேற்று முன்தினம் இரவு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். வடக்கு காரோ மலை மாவட்டத்தின் கர்குட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தென்மேற்கு காரோ மலை மாவட்டத்தில் 7 பேர் உயிரி ழந்தனர்.

இது தவிர, மேலும் 24 பேரை காணவில்லை என்றும், அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

வெள்ளப் பாதிப்புகள் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் முகுல் சங்மா ஆலோசனை நடத்தினார். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந் தோர், 8 படகுகளுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்