மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதால், இதுதொடர்பான உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
அமராவதியிலிருந்து நேற்று முன்தினம் டெலிகான்பரன்ஸ் மூலம் ஆந்திர மாநில கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
பல்வேறு கட்சிகளின் கருத்தின்படி, மின்னணு வாக்கு இயந்திரங்களில் இம்முறை முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதுதொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் விரைவில் வழக்கு தொடரப்படும். தெலுங்கு தேசம் கட்சி பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. இக்கட்சியை விட்டு விலகுபவர்கள் குறித்து நாம் யோசிக்கத் தேவையில்லை. கட்சிக்காக பாடுபடுபவர்களை இக்கட்சி என்றுமே கைவிட்டது கிடையாது.
இருந்தபோதிலும், என் மீது எதிர்க்கட்சிகள் ஜாதி சாயம் பூச முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. இது பலிக்காது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago