தேசிய வரி தீர்ப்பாயச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித் துள்ளது.
தேசிய வரி தீர்ப்பாயச் சட்டம், கடந்த 2005-ம் ஆண்டு நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து 2006-ம் ஆண்டு சென்னை பார் அசோசியேஷன் சார்பில் பொது நல மனு தொடரப் பட்டது. இதை தொடர்ந்து பல் வேறு மனுக்கள் தொடரப்பட்டன. இச்சட்டம் உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிப்பதாக அமைந் துள்ளது. இந்த தீர்ப்பாயம் அரசுத் துறையின் ஓர்அங்கமாக செயல் படுகிறது. எனவே, இச்சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
நீதிமன்றத்தின் வேலைப் பளுவைக் குறைக்கவே வரி விவகாரம் தொடர்பான வழக்கு களை விசாரிக்க தீர்ப்பாயம் அமைக்கும் சட்டம் இயற்றப்பட்டது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பை வெளியிட்டது.
தேசிய வரி தீர்ப்பாயம் அமைக் கும் முடிவு சட்ட விரோதமானது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வரி தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகா ரம் உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றத்துக்கு மட்டுமே உள்ளது. நீதித்துறையின் அதிகாரத்தை நாடாளுமன்றம் பறிக்க அனு மதிக்க முடியாது. இச்சட்டம் அரசி யல் சாசனத்தில் நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் அத்துமீறும் செயல் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago