காஷ்மீர் விவகாரத்தில் ஆளும் பாஜக அரசு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,
''தேர்தல் தேதியை அறிவிக்கும் முன், போர்ச் சூழலை உருவாக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் தேர்தலை நாசப்படுத்த எண்ணுகிறது. மக்களவைத் தேர்தலில் தனது முடிவை பாஜக ஊகித்துவிட்டது. இதன்மூலம் அவசர நிலையை அமல்படுத்தி, தேர்தலை நிறுத்த முயல்கிறது.
பாலகோட் தீவிரவாத முகாமில் இந்திய விமானப் படை தாக்குதலை நடத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தைப் போராக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. இதனை பாகிஸ்தானுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பப் பயன்படுத்திக் கொள்கிறது. அதேபோல நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கவும் அவர்கள் முயற்சிக்கின்றனர்.
ஆர்எஸ்எஸ், தேசத்தில் வகுப்புவாத பிளவுகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது'' என்று குற்றம் சாட்டினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago