மேகாலயாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 39-ஆக அதிகரித்துள்ளது. பல இடங்களில் மக்களிடையே காய்ச்சல் பரவிவருவதால் அங்கு அது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேகாலயா மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் கனமழையால், 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெள்ள பாதிப்பை சரி செய்யும் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
முக்கிய சாலைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. பல இடங்களில் தொலைத் தொடர்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சேர்பதிலும், நிவாரண பொருட்கள் வழங்குவதிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்வர் முகுல் சங்மா பேசும்போது, "இங்குள்ள மக்கள் அனைவரும் அவர்களுக்குள் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். தொண்டு நிறுவனங்கள் அளித்து வரும் உதவிகள் எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது. நாங்கள் இங்கு இருக்கும் நிலைமையை சரிசெய்ய துணை ராணுவப் படையை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago