தம் கட்சிப் பதவிக்குப் பின் முதன்முறையாக உ.பி. வந்த பிரியங்கா வதேராவின் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. தன் கணவர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்காக நேற்று மாலை ராகுல் காந்தியுடன் ஜெய்ப்பூர் விரைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக அமர்த்தப்பட்ட பிரியங்காவிற்கு உ.பி.யின் கிழக்குப் பகுதி பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதன்முறையாக நேற்று அவர் உ.பி. வந்தார்.
தன்னுடன் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அன்று மாலை டெல்லி திரும்புவதாகவும், ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுடன், பிரியங்கா நான்கு நாள் உ.பி.யில் தங்கி கட்சிப்பணிகளைப் பார்ப்பதாகவும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. ஆனால், நேற்று ஜெய்ப்பூரில் தன் கணவர் ராபர்ட் வதேரா மற்றும் மாமியார் மவுரின் ஆகியோருடன் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதற்காக அவர்களுடன் இருக்க விரும்பினார் பிரியங்கா.
எனவே, தன் சகோதரர் ராகுலுடன் நேற்று மாலை தனி விமானத்தில் லக்னோவில் இருந்து ஜெய்ப்பூர் கிளம்பினார். இன்று காலை மீண்டும் லக்னோ திரும்பி வந்து கட்சிப் பணிகளுக்காக நான்கு நாட்கள் தங்குவது பிரியங்காவின் திட்டம் ஆகும்.
ராபர்ட் வதேரா கோரிக்கை
இதனிடையே, தன் மனைவியின் தீவிர அரசியல் பிரவேசம் குறித்து ராபர்ட் வதேரா ட்வீட் செய்திருந்தார். அதில் அவர், எதிர்பாராத அரசியல் மாற்றத்தினால், நாட்டின் பணிக்காக தான் ஒப்படைத்த தன் மனைவியைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ளும்படி பொதுமக்களிடம் வேண்டியிருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago