திருமலை திருப்பதி தேவஸ்தான நிலங்கள் சிலரால் அபகரிக்கப்பட்டு வந்தாலும் அதனை ஆந்திர அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால், இது குறித்து தேவஸ்தானம் மீதும், முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் வழக்கு தொடருவேன் என விசாகப்பட்டினம் ஸ்ரீ சாரதா பீடாதிபதி சுவரூபானந்தா சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் ஸ்ரீ சாரதா பீடாதிபதியான சுவரூபானந்தா சுவாமிகள் குண்டூரில் உள்ள பத்மாவதி, ஆண்டாள் சமேத வெங்கடேஸ்வர சுவாமி தேவஸ்தான பிரம்மோற்சவத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிலங்களை சிலர் அபகரித்தும், ஆக்கிரமித்தும் வருகின்றனர். இதேபோன்று ஆந்திராவிலும் ஊழல் அதிகரித்து விட்டது. இதனால், நான் விரைவில் ஆட்சி மாற்றம் நடைபெற ராஜசியாமளா யாகம் நடத்த உள்ளேன். சமீபத்தில் கூட நான் தெலங்கானாவில் மீண்டும் கே. சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க வேண்டுமென இதே யாகம் செய்தேன். அதனால்தான் அவர் மீண்டும் ஆட்சியை பிடித்தார். ஆந்திராவில் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தான நில ஆக்கிரமிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. இது குறித்து விரைவில் வெளி உலகிற்கு தெரிவிப்பேன்.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிலங்கள் சிலரால் அபகரிக்கப்பட்டு வந்தாலும் அதனை ஆந்திர அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இது குறித்து தேவஸ்தானம் மீதும், முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் வழக்கு தொடருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பீடாதிபதியின் இந்த பேச்சைக் கேட்டு, தெலுங்கு தேச கட்சியினர் கொந்தளித்து வருகின்றனர். ஆன்மீகவாதிக்கு அரசியல் தேவையா? ஒருவேளை அரசியலில் ஈடுபட வேண்டுமென எண்ணம் இருந்தால் பீடாதிபதி பதவியை விட்டு விட்டு, இம்முறை நடைபெற உள்ள தேர்தலில் அவர் போட்டியிட வேண்டுமெனவும் தெலுங்கு தேச கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago