காவிரி டெல்டாவை உள்ளடக்கி நடைபெறவுள்ள ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான 3-வது சுற்று ஏலத் தில், தமிழகத்தில் 2 வட்டாரங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கடந்த 5 மாதங் களில் 3 சுற்றுகளாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறி விப்பை செய்துள்ளது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் இந்தியா முழுமைக்கும் 55 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஏலம் விடப்பட்டது. இவற்றில் தமிழக காவிரி டெல்டாவில் 2 ஆழ்கடலற்ற கடல் பகுதிகளுக்கான உரிமத்தை வேதாந்தா நிறுவனமும், ஒரு தரைப் பகுதிக்கான உரிமத்தை ஓஎன்ஜிசியும் உரிமம் பெற்றன.
பின்னர், கடந்த ஜன.4-ம் தேதி இந்தியா முழுவதும் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்ட 14 வட்டாரங்களில், காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் தொடங்கி, நாகை மாவட்ட தெற்கு பகுதிகளில் 474 ச.கி.மீ பரப்பளவுக்கு வரும் மார்ச் மாதத்தில் உரிமம் வழங்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பு வெளியிட்டதில் இருந்தே பல்வேறு அரசியல் கட்சி களும், விவசாய சங்கங்களும் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக போராடி வருகின் றன. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 500-க்கும் மேற்பட்டோர் மீது திருவாரூர் வட்டக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜன.26-ம் தேதி முதல், திருக் காரவாசலில் விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இரவுநேர காத்திருப்பு போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 3-வது சுற்றுக் கான ஏல அறிவிப்பு கடந்த 11-ம் தேதி வெளியாகியுள்ளது. இதில், இந்தியா முழுவதுமான 23 வட்டாரங்களில் தமிழகத்தின் காவிரி டெல்டாவையும் உள்ளடக்கி 2 வட்டாரங்கள் அடங்கியுள்ளதால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அறிவி யல் இயக்க கருத்தாளர் வ.சேது ராமன், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: காவிரி டெல்டாவில் இயற்கை எரிவாயு எடுக்கும் பணி கள் பல நாட்களாக நடைபெற்று வந்தாலும், மீத்தேன் மற்றும் ஷேல் காஸ் எடுப்பதற்கு பயன் படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்த அச்சம் காரணமாக, காவிரி டெல்டா பகுதிகளில் புதிய துரப்பண பணிகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
2-வது சுற்று ஏல அறிவிப்பு வெளியானதில் இருந்தே, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் களத்தில் உள்ளபோது, அதைப் பொருட்படுத்தாமல் தற்போது 3-வது சுற்று ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் 459.89 சதுர கி.மீ பரப்பளவும், ராம நாதபுரம் மாவட்டத்தில் 1403.41 சதுர கி.மீ பரப்பளவும் ஏலம் விடப்படவுள்ளது. இந்த 2 வட் டாரங்களையும் எந்த நிறுவனத் துக்கு உரிமம் வழங்குவதென ஏப்.10-ம் தேதி இறுதி செய்ய வுள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
மக்களுக்கு பாதகத்தை ஏற் படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட் டோம் என்பதில் தெளிவாக இருப்பதாக தமிழக அமைச்சர்கள் கூறினாலும், மத்திய அரசின் இந்த ஏல அறிவிப்புகளை எதிர்த்துப் போராடுபவர்கள் மீது தொடர்ச்சி யாக தமிழக போலீஸார் வழக்கு பதிவு செய்வது முரண்பாடாக வுள்ளது. எனவே, இந்த விஷயத் தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
15 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago