5 வயது சிறுமியை பிரம்பால் அடித்ததாகப் புகார்: ஆசிரியர், பள்ளி முதல்வர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

By ஏஎன்ஐ

தெலங்கானாவில்  5 வயது சிறுமியை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் மீது போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தது:

''சாய்னிக்புரியில் உள்ள பவன் வித்யாலாவில் யூகேஜி படிக்கும் மாணவியை ஆசிரியர் பிரம்பால் அடித்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமி பலத்த அடிவாங்கிய நிலையில் மேலும், வகுப்பறையில் அமர்ந்து பாடங்களைக் கவனிக்க இயலவில்லை என்று சிறுமி தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் தன்மையினைக் கருத்தில்கொண்டு இவ்வழக்கு சிறார் சட்டப்பிரிவின்கீழ் உடனடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

2010-ல் மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் மாணவர்கள் மீது உடல்ரீதியான தண்டனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தாவில் 12 வயது சிறுவனை மனிதாபிமானமின்றி பள்ளி முதல்வரே மிக மோசமாக பிரம்பால் அடிக்கும் தண்டனையை அளித்ததன் விளைவாக இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்