பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடந்து வருகிறது.
இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானின் முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் சுமார் 1000 கிலோ வெடிகுண்டை வீசி தீவிரவாதிகள் முகாம்களை முற்றிலுமாக அழித்தன. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்தத் தாக்குதல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இதுவரை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவமும் எல்லை கடந்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தலாம் என்று பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் கூட்டதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத்துறை சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
51 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago