பாஜகவுடன் கூட்டணி முடிவு எடுப்பதில் அதிமுக தாமதம்: கட்சியில் பிளவு ஏற்படும் என்ற அச்சம்?

By ஆர்.ஷபிமுன்னா

பாஜகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக முடிவு எடுப்பதில் அதிமுக தலைமை தாமதித்து வருகிறது. இந்த கூட்டணியை எதிர்க்கும் தங்கள் எம்எல்ஏ, எம்.பி.க்களில் ஒரு பிரிவினர் தினகரன் அணிக்கு தாவி விடுவர் என்ற அச்சமே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்து வருகிறது. இதை எதிர்கொள்ளும் வகையில் ஆளும் கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயன்று வருகிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி சேர்வதை அதிமுகவின் எம்எல்ஏ, எம்.பி.க்களில் ஒரு பகுதியினர் விரும்பவில்லை எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான செய்தி கடந்த ஜனவரி 29-ல் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளியாகி இருந்தது.

இதனிடையே, பாஜகவுடன் கூட்டணிக்கு அதிக எதிர்ப்பு கிளம்பினால், அதைக் காரணம் காட்டி கடைசிநேரத்தில் அதிமுக கைவிரிக்கவும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்கு இரு அமைச்சர் மற்றும் மூத்த தலைவர்களுடன் அதிமுக அமைத்துள்ள மனுக்கள் குழுவை ஆயுதமாக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, கூட்டணிக்கான முடிவை உடனே எடுக்க வேண்டும் என்ற பாஜகவின் வற்புறுத்தலை அதிமுக தவிர்த்து வருகிறது.

இதற்கான ரகசிய பேச்சுவார்த்தையை அதிமுக முடிந்தவரை இழுத்து, தாமதமாகவே முடிவு எடுக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிமுக எம்.பி.க்கள் வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “உடனடியாக கூட்டணி அறிவிப்பை வெளியிட்டால் பாஜக எதிர்ப்பாளர்கள் தினகரன் அணியில் சேரும் வாய்ப்புகள் உள்ளன. இதை சமாளிக்க தேர்தல் அறிவிப்புக்கு பிறகு கூட்டணி முடிவை தாமதமாக அறிவிக்கத் தலைமை திட்டமிடுகிறது. ஆனால் உடனடியாகப் பிரச்சாரம் தொடங்க வேண்டி, இதை தாமதிக்க வேண்டாம் என எங்கள் தலைமையிடம் பாஜக வற்புறுத்துகிறது” என்று தெரிவித்தனர்.

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு ஒரு மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில் கூட்டணி அறிவிப்பை அதிமுக தாமதிப்பது, பாஜகவுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டம் மதுரை மற்றும் திருப்பூரில் நடந்தது. பிரதமரின் அடுத்த கூட்டம் 19-ம் தேதி நாகர்கோவிலில் நடைபெற இருந்தது. இது மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் கூட்டணி முடிவை அறிவிக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்