5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றடை வதற்கு முன்னரே, அங்குள்ள நீதிமன்றம் ஒன்று அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
2002-ல் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் தொடர்புபடுத்தி நியூயார்க் நீதிமன்றத்தில் 'அமெரிக் கன் ஜஸ்டிஸ் சென்டர் (ஏஜேசி)' என்ற மனித உரிமை அமைப்பு 28 பக்க குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தொடர்ந்தது.
குஜராத் கலவரத்தில் பாதிக் கப்பட்டு சாட்சியங்களாக உள்ள இருவர் தரப்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
1789-ம் ஆண்டு அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட ஏடிசிஏ என்ற சட்டத்தின்படி, வெளிநாடுகளில் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக நடந்துகொள்பவர்கள் மீது அமெரிக்க வாழ் மக்கள் அங்குள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியும்.
அந்த வகையில் இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் தெற்கு மாவட்ட பெடரல் நீதிமன்றம், நரேந்திர மோடிக்கு நேற்று முன்தினம் சம்மன் அனுப்பி யுள்ளது. ஏ.டி.சி.ஏ. மற்றும் டி.வி.பி.ஏ. சட்டங்களின் கீழ் மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நீதிமன்ற சம்மனுக்கு 21 நாட்களுக்குள் மோடி தவறாமல் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நாள் அரசுமுறைப் பயணமாக மோடி நேற்று அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்மன் குறித்து டெல்லி யில் நேற்று கருத்து கூறிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "இந்த செய்தியை உங்கள் (ஊடகம்) மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். இந்த சம்மனில் கூறப் பட்டுள்ள விவரங்கள் குறித்து ஆய்வு செய்வோம்" என்றார்.
இதனிடையே நியூயார்க்கில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்திய ரும் முன்னணி வழக்கறிஞருமான ரவி பத்ரா கூறும்போது, "ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில் குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டப்பாதுகாப்பு மோடிக்கு உள்ளது. விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவே இந்த சட்டப் பிரிவுகளை சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago